17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » மண்டபம் பேரூராட்சியில் பாலித்தின் பொருட்கள் பறிமுதல்…

மண்டபம் பேரூராட்சியில் பாலித்தின் பொருட்கள் பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் July 20, 2018, 3:13 pm

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடிய . பிளாஸ்டிக் மற்றும் பாவித்தின் பொருட்களை பொதுமக்கள், வணிக நிறுவனங்களை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச நடராஜன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள கடைகளில் பாலித்தின், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தினர். பேருராட்சி செயல் அலுவலர் எஸ்.மஞ்சுநாத், இளநிலை உதவியாளர் எஸ். முனியசாமி, துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) ஜாஹீர் உசேன் உள்ளிட்ட பணியாளர் கள் சுமார் 70 கிலோ பாலித்தின் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்ப்பட்ட பாவித்தின் பொருட்களை மறுசுழற்சிக்காக வளம் மீட்பு பூங்காவில் சேர்த்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!