17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் திருக்கல்யாணம்..

இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் திருக்கல்யாணம்..

எழுதியவர்: ஆசிரியர் July 19, 2018, 6:26 pm

இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்டதும், நிர்வாகத்திற்குட்பட்டதுமான இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் 1428ம் ஆண்டு பசலி ஆனி பிரமோற்சவ 6ம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதை முன்னிட்டு நேற்றிரவு (/8/07/2018) மாலை 5 மணி அளவில் யானை வாகனத்தில் ஸ்ரீராமர் ரத வீதியில் வலம் வந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மாலை 6 மணியளவில் துவங்கிய திருக்கல்யாணம் இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 21 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!