18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே மூதாட்டி நகை பறிப்பு..

திருவாடானை அருகே மூதாட்டி நகை பறிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 8:40 pm

திருவாடானை அருகே மூதாட்டியை உருட்டுக்கட்டையால் தாக்கி 3 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

இராமநாதாம் மாவட்டம் திருவாடானை அருகே பானநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வர் காசி, 55 .இவரது மனைவி நாகவள்ளி (50). காசிக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த சோணைமுத்து (50) என்பவருக்கும் இடையே நிலம் விவகாரம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு (17.7.18) சோணைமுத்து (55) ரஞ்சித் (28) உள்பட அடையாளம் தெரிந்த சிலர் காசி வீட்டிற்குள் புகுந்து நாகவள்ளியை உருட்டுக் கட்டையால் தாக்கினர். நிலை குலைந்த நிலையில் இருந்த நாகவள்ளி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர் .

இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போவீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!