18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதி அருகே குடும்பத்தகராறில் கணவனை வெட்டி கொன்று உடலை எரித்த மனைவி….

கமுதி அருகே குடும்பத்தகராறில் கணவனை வெட்டி கொன்று உடலை எரித்த மனைவி….

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 4:47 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கொடுமலூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் ஆறுமுகம் (29) என்பவருக்கும், போதும்பொண்ணுவுக்கும் (28 )திருமணமாகி 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆறு முகம் தம்பி வேல்முருகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போதும் பொண்ணு ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஆறுமுகத்தை போதும்பொண்ணு எரித்து கொலை செய்ய முயன்றார்.

அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வந்ததால், ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆடியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம் உயிரிழந்தார். உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் போதும் பொண்ணு மீது சந்தேகம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த போதும் பொண்ணு, வேல்முருகனை அபிராமம் போலீசார் கைது செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!