18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தார்கோட்டையில் கஞ்சா விற்பனை அமோகம் ! – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

சித்தார்கோட்டையில் கஞ்சா விற்பனை அமோகம் ! – நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2018, 4:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் சமூகவிரோதிகள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார்கோட்டை ஊராட்சியில்  சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதை தாராளமாக கிடைக்கும் வகையில் சமூக விரோதிகள் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர் என  இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும்   அனைத்திந்திய அண்ணா திமுக கிளைச் செயலாளருமான தமீம் ரகுமான் இதுகுறித்து  கூறியதாவது, சித்தார்  கோட்டை பகுதியில் பள்ளி மாணவர்களை  மற்றும்இளைஞர்களை சீரழிக்கும் வகையில் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருள்களை சமூக விரோதிகள்  விற்பனை செய்து வருகின்றனர்,  அப்படி விற்பனை செய்யும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .  மேலும் உபயோகமற்ற பராமரிப்பு இல்லாத கட்டிடங்களே இத்தொழிலுக்கு சமூக விரோதிகளுக்கு வசதியாக உள்ளது” என  அவர் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!