17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரட்டைக்கொலை வழக்கு மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

இரட்டைக்கொலை வழக்கு மேலும் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 7:31 pm

இராமநாதபுரம் அருகே இருவரை கழுத்தறுத்து கொன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவை அம்மன் கோவில் பகுதியில் மே 20 காதணி விழா முடிந்த வீட்டில் சிலர் திறந்த வெளியில் இரவில் து£ங்கிக்கொண்டிருந்தனர். இவர்களில் தேவர் நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் விஜய் 26, அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் பூமிநாதன் 32, ராஜேந்திரன் மகன் விஜய் 20 ஆகியோரை சிலர் கழுத்தறுத்தனர். இவர்களில் விஜய், பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் இறந்தனர். இது தொடர்பாக 20 பேர் மீது இராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே 12 குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வாலாந்தரவை அருகே ஏந்தல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வாசு 36, ரெவின்யுவலசையைச் சேர்ந்த முத்துக்காமாட்சி மகன் பிரசாந்த் 26 ஆகியோர் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் உத்தரவில் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரட்டைக்கொலை வழக்கில் இன்றுடன் 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!