17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீசார் தோண்டி எடுத்த வெடி பொருட்களை அப்புறப்படுத்தாததால் வீட்டை காலி செய்த உரிமையாளர்..

போலீசார் தோண்டி எடுத்த வெடி பொருட்களை அப்புறப்படுத்தாததால் வீட்டை காலி செய்த உரிமையாளர்..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 7:17 pm

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் எடிசன் என்பவர் தனது வீட்டின் பின்புறம் கழிப்பறை கட்ட நிலத்தை கூலியாட்கள் தோண்டினர் .அப்போது வெடி பொருட்கள் தெரிய வந்தது. தகவலின் பேரில் போலீசார் தோண்டியதில் செயலிழந்த நிலையில் ஏராளமான வெடி பொருட்கள், துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் ஜூலை 3ல் வெடிபொருட்களின் தற்போதைய நிலை குறித்து சோதனை செய்தனர்.

மூன்றரை வாரமாகியும் வெடிபொருட்களை அப்புறப்படுத்தாததால் அங்கு யாரும் நிம்மதியாக தூங்க முடியாமல் அச்சத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் அச்சமுடன் அங்கு வசிப்பதைவிட வீட்டை காலி செய்து வேறிடம் செல்ல எடிசன் முடிவு செய்தார். இதையடுத்து சாமான்களை எடுத்து கொண்டு வீட்டை காலி செய்தார் எடிசன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!