17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி 4 மீனவர்கள் நடுக்கடலில் கைது ..

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி 4 மீனவர்கள் நடுக்கடலில் கைது ..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2018, 8:33 am

நெடுந்தீவு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த விசைப்படகில் 37 கிலோ கஞ்சா பொட்டலங்களை இலங்கை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 மீனவர்களை கைது செய்தனர். 

இலங்கை நெடுந்தீவு கடலில் அந்நாட்டு கடற்படை வீரர்கள் கப்பலில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது விசைப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 மீனவர்களை பிடித்து விசாரித்தனர். விசைப்படகில் 37 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டுபிடித்தனர். கஞ்சாவை பறிமுதல் நான்கு பேரையும் கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாம் கொண்டு சென்றனர். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு நெடுந்தீவு போலீசில் ஒப்படைத்தனர். 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!