17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடலில் பலத்த காற்று கடலுக்குச் செல்ல தடை..,

கடலில் பலத்த காற்று கடலுக்குச் செல்ல தடை..,

எழுதியவர்: ஆசிரியர் July 16, 2018, 9:24 am

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், தேவிபட்டினம், ஏர்வாடி, கீழக்கரை, காரங்காடு, களிமண்குண்டு உள்பட 20க்கும் கடல் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ., இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். ஐந்தாவது நாளாக படகுகள் தொழிலுக்குச் செல்லாததால் ரூ.7.5 கோடி அளவிற்கு மீன் ஏற்றுமதி பாதித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!