17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரம் கல்வி அலுவலரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ..

இராமநாதபுரம் கல்வி அலுவலரை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ..

எழுதியவர்: ஆசிரியர் July 13, 2018, 11:12 pm

கல்வி நலன், ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படும் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கா.சாமி அய்யா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அ.மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்(பொறுப்பு) ரா.சிவபாலன், மாவட்ட செயலாளர்(ஓய்வு பிரிவு) அ.மருது, மாவட்ட தலைவர் (ஓய்வு பிரிவு) சி.ஆறுமுகம், மாவட்ட பொருளாளர்( ஓய்வு பிரிவு) கே.சாத்தையா, வட்டாரச் செயலாளர்கள் ரவே.ராமமூர்த்தி( கமுதி), கே.கதிரவன்(திருவாடானை), ஏ.செங்கோல் திரவியம்(திருப்புல்லாணி), மு.சரவணன்(ராமநாதபுரம்), எஸ்.தமிழ் மாறன்(மண்டபம்), ஒய்.ஆனந்தராஜ்(கடலாடி), டி.ஆரோக்கியசாமி(ஆர்.எஸ்.மங்கலம்), எம்.கோவிந்தராஜ்(போகலூர்), என்.சரவணன்(நயினார்கோவில்),  எம்.அருள்தாஸ்(முதுகுளத்தூர்), நகர் செயலாளர் எஸ்.சேவியர்(பரமக்குடி) ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கவேண்டும், மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் வருகை பதிவை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்ட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக மீண்டும் நடத்த வேண்டும், தொடக்க கல்வித்துறையை பள்ளி கல்வித்துறையுடன் இணைத்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரத்தை தலைமை ஆசிரியர்கள் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் அனுப்பும் புதிய செயல்முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!