17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » காலிக்குடங்களுடன் பெண்கள் மக்கள் குறை தீர் நாள் முகாமில் மனு..

காலிக்குடங்களுடன் பெண்கள் மக்கள் குறை தீர் நாள் முகாமில் மனு..

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2018, 4:30 pm

இராமாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா, தனிச்சியம் ஒன்றியம் , T.கிருஷ்ணாபுரம் கிராம பெண்கள்  குடிநீருக்காக தினமும் சுமார் 5.கிலோ மீட்டர் தூரம் வரை வாலிநோக்கம் முக்கு ரோடு வரை வந்து காவிரி  குடிநீர் திட்ட குழாய்கள்  உடைந்து அதில் வெளிவரும் குடிநீரை தள்ளு வண்டிகள் மூலம் எடுத்து  செல்கின்றனர்.

இது பெரும்பாலும்  இரவு நேரமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்தில் சிக்கி கொள்கின்றனர். சிலதினங்காளுக்கு முன்பு இது போன்ற விபத்தால் சிக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். எனவே இப் பிரச்னைக்கு  நிரந்தர தீர்வு காண வலியுக்தி  கிருஷ்ணாபுரம் கிராமத்தில் காட்சி பொருளாக இருக்கும் காவிரி கூட்டு குடிநீர் குழாய்களில் குடிநீர் விநியோக்கரை  தொய்வின்றி தொடர்ந்திட உரிய நடவடிக்கை எடுக்க ண்டும்.   ஊராட்சி நிர்வாகம்   மூலம் கிணற்று நீரை சுத்திகரிப்பு செய்து (RO பிளான்ட்) குடிநீராக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்  K.பச்சமால் தலைமையில் கிருஷ்ணாபுரம் கிராம பெண்கள், தள்ளு வண்டி மற்றும் காலிக் குடங்களுடன் மக்கள் குறை தீர் நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் இன்று. (09/07/2018) காலை கோரிக்கை மனு கொடுத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!