17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்..

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2018, 2:46 pm

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்  சாலை மறியல் நடைபெற்றன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 26 கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தனர் ஊராட்சி செயலாளர் எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் பல மாவட்டங்களில் ஊழியர்களை எந்த விளக்கமும் கூறாமல் பணியில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் கணிப்பொறி உதவியாளருக்கு சிறப்புத் தேர்வு நடத்த வேண்டும் ஊராட்சி ஒன்றியங்களில் புதிய கணினி உதவியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் கடந்த போராட்டங்களை வரன்முறை செய்ய வேண்டும் கணக்கு தேர்விற்குரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்  கூடுதல் இயக்குனர்களை தலைமை அலுவலர்களாக கொண்டு மண்டல அலுவலகம் இயக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் சேகர் மாநில செயலாளர் செல்வகுமார் அரசு ஊழியர் சங்க பொருளாளர் சரத்குமார் துரை ஆகியோர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!