17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: keelai February 14, 2017, 2:30 pm

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகரை திறந்த வெளி கழிப்பறையற்ற நகரமாக உருவாக்குவது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (14-02-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திறந்த வெளி கழிப்பறையால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் ஹாஜா, பள்ளியின் ஆசிரிய பெருந்தகைகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!