17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணியில் மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

திருப்புல்லாணியில் மர்ம காய்ச்சலால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 8:13 pm

திருப்புல்லாணி முஸ்லீம் தெருவில் மர்ம காய்ச்சல் பாதிப்பில் 150 பேர் வீட்டில் முடக்கம், பல பேர் மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

திருப்புல்லாணி கிழக்குத்தெரு, முஸ்லிம் தெருக்களில் கடந்த 1 மாதமாக தொடரும் வைரஸ் காய்ச்சலால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.  மர்ம காய்ச்சலின் பாதிப்பால் 150 பேர் வெளியே கூட செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வைரஸ் காய்ச்சலால் பாதிப்பிற்குள்ளான திருப்புல்லாணி ஜாமியா பள்ளிவாசல் இமாம் மவுலவி முகம்மது தாகிர், 39 யாக்கூப் ஆகியோர் கூறியதாவது: குடும்பத்தில் அனைவருக்கும் வைரஸ் காய்ச்சலின் பாதிப்புகள் உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில்  உள்ளனர். கை, கால்களின் மூட்டுகளில் அதிகளவு வலியால்,ஒருபக்கம் இழுக்கிறது. மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறோம்.மீன்வியாபாரி முகம்மது கனி உட்பட நுõற்றுக்கணக்கானோர் பாதிப்பில் உள்ளோம்.

எனவே மருத்துவத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!