14 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்,  வளர்ச்சித் திட்டப் பணிகளை   மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்,  வளர்ச்சித் திட்டப் பணிகளை   மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

எழுதியவர்: Askar June 13, 2026, 10:12 am
ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்,  வளர்ச்சித் திட்டப் பணிகளை   மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி,  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்,  வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி, வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர்  ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட என்.பஞ்சம்பட்டியில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிலையத்தின் செயல்பாடு குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், என்.பஞ்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் காலனி அருகில் ரூ.1.527 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மரங்களுக்கு சாம்பல் நீர் முறையாக கொண்டு சேர்க்கப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
அதேபோல்,  என்.பஞ்சம்பட்டியில் செயல்பட்டு வரும் சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியை   பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீரக்கல் ஊராட்சிக்குட்பட்ட கும்மம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணியினையும் மற்றும் குழாய் இணைக்கும் பணியினையும்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து,  வீரக்கல்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.71.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டடத்தின்  கட்டுமானப் பணியினை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உணவுக் கூடத்தில் தயாரிக்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களை புத்தகத்தை வாசிக்க செய்து வாசிப்பு திறன்களை ஆய்வு செய்தார்.
மேலும், வீரக்கல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 1 பயனாளிக்கு ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கனவு இல்லம் வீட்டின் கட்டுமானப் பணியினை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.    போடிகாமன்வாடி உராட்சிக்குட்பட்ட வீராசிக்கம்பட்டியில் கடன் உத்தரவாத நிதித் திட்டத்தின் கீழ், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் அமைக்கும் பணியினையும்  பார்வையிட்டார்.
ஆய்வின் போது,  ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மாவதி இளையராஜா, ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் ராமநாதன், ஊராட்சி மன்ற செயலர்கள் என்.பஞ்சம்பட்டி சேசுராஜ், வீரக்கல் முத்துச்சாமி, ஆத்தூர் மணவாளன், போடிகாமன்வாடி திருப்பதி, சீவல்சரகு  நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!