07 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் “We The Leaders” அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்; ஏராளமான இளைஞர்கள் இணைந்தனர்.!

பழனியில் “We The Leaders” அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்; ஏராளமான இளைஞர்கள் இணைந்தனர்.!

எழுதியவர்: Baker BAker June 6, 2026, 6:40 pm

 

முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள “We The Leaders” அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்றது.
சமூக மாற்றத்திற்கும், இளைஞர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதற்கும் நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம், சிவகிரிப்பட்டி பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
முகாமிற்கு பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைப்பின் நோக்கங்கள், எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
சிவகிரிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, மாற்று அரசியல் மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுத்தும் முயற்சியாக அமைந்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!