23 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலம் அருகே தடை செய்யப்பட்ட 154 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது..

குற்றாலம் அருகே தடை செய்யப்பட்ட 154 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik June 6, 2026, 8:14 am

குற்றாலம் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1,54,000 மதிப்பிலான 154 கிலோ புகையிலைப் பொருட்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபரை குற்றாலம் காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அசோக்குமார், உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் .

அந்த வகையில், 05.06.2026 அன்று குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லம் பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், சுப்பையா மகன் முத்துகுமார் (51) என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 154 கிலோ எடை கொண்ட (மதிப்பு ரூ. 1,54,000/-) புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து குற்றாலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது குறித்தும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!