17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மாணவர் புதுமைக் குழுமம்..

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் மாணவர் புதுமைக் குழுமம்..

எழுதியவர்: ஆசிரியர் July 8, 2018, 9:03 am

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் புதுமைக் குழுமம் நிகழ்ச்சி விழா 07.07.2018  அன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. எஸ்.ஐ. சுமையா இரண்டாமாண்டு உளவியல் துறை மாணவி வரவேற்புரை வழங்கினார்.  கல்லூரியின் முதல்வர் முனைவர் சுமையா அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்.  பிரேமானந்த்,  கேப்ஸ்டோன் கன்சல்டன்ஸி தலைமை நிர்வாக அதிகாரி புதுமைக்குழுமம் பற்றிய அறிவுரை வழங்கினார்.   காலித் ஏ கே புகாரி, செயலாளர்,  சீதக்காதி அறக்கட்டளை,  சென்னை வாழ்த்துரை வழங்கினார்கள்.

அதைத்  டாக்டர் எம். மணிகண்டன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  ஏழை எளிய மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி வழங்கியதைப் பற்றியும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கியதைப் பற்றியும்,  இராமநாதபுர மாவட்டத்தில் சட்டக்கல்லூரி, இரயில்வே பாலம் மற்றும் விமான நிலையம் அமைப்பது பற்றி எடுத்துரைத்தார்.  மாணவ மாணவிகள் தமக்கு தேவையான நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செல்வி எஸ் தனியா மோல் தலைவர், உளவியல்துறை அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  பேராசிரியர்  பன்பரசி ஃபாத்திமா, டீன் ஆப் சயின்ஸ், முனைவர் ஏ ஜாஸ்மின், டீன் ஆப் ஆர்ட்ஸ்இ முனைவர் சுலைகா ஷக்கீல், துணை முதல்வர் மற்றும் எஸ் முத்துமாரீஸ்வரிää பேராசிரியர், மனையியல் துறை ஆகியோர் தலைமை வகித்தனர்.  இந்நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப்பொது மேலாளார் அல்ஹாஜ் எஸ் ஷேக் தாவூது கான் அவர்களும் பேராசிரியப் பெருமக்களும்இ  மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களும்  செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!