17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » பிரச்சனை » மையம் இருந்தும் சேவை இல்லாமல் இருக்கும் இ-சேவை மையம்…

மையம் இருந்தும் சேவை இல்லாமல் இருக்கும் இ-சேவை மையம்…

எழுதியவர்: ஆசிரியர் February 14, 2017, 1:45 pm

கீழக்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் இ-சேவை மையம் திறக்கப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு பட்டா, சிட்டா நகல், ஆதார், வாக்காளர் அட்டைகள் பெறுவதற்காக நகராட்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பயனாளிகள் தினமும் வந்துசெல்கின்றனர்.

இதற்காக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் 2 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கிருந்த பிரிண்டர் மெஷின் பழுதடைந்துள்ளதால் கடந்த 2 மாதமாக இ.சேவை மையம் முடங்கியுள்ளது. இதனால் சான்றிதழ், அட்டைகள் பெறுவதற்காக வரும் பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். பழுதடைந்த பிரிண்டரை சரி செய்து பொதுமக்கள் அலைக்கழிக்கப்படாத வண்ணம் சேவையை தொடர உரிய அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!