முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெறச்செய்யுங்கள். நிலக்கோட்டையில் கனிமொழி கருணாநிதி பேச்சு.
நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் நாகஜோதியை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த வேட்பாளர் நாகஜோதியே வெற்றி பெற செய்யுங்கள் என பேசி, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதி திமுக வேட்பாளர்
நாகஜோதியை ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்ட போது,
அவர் பேசியதாவது… நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் நாகஜோதி மக்களோடு பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியவர். எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் மக்களை சந்திப்பதே கிடையாது. நேரா வீட்டுக்கு வருவாங்க சட்டமன்றத்துக்கு போவாங்க அவ்வளவுதான். ஆனால், நம்முடைய வேட்பாளர் மக்களோடு நின்று பணியாற்றும் நாகஜோதிக்கு உங்களுடைய மேலான பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச்செய்யுங்கள்.
வாக்கு கேட்கும் போது பெருமிதத்தோடு ஒரு மகிழ்ச்சியோடு பெருமையோடு வந்து வாக்கு கேட்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதை சொல்லி ஓட்டு கேட்கிறோம். எங்களுடைய முதலமைச்சர் மக்களுக்கு இத்தனை திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறார் என்ற உரிமையோடு வந்து மக்களை சந்தித்து அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெயரால் வாக்கு கேட்கிறோம்.
எதிரணியில் மாத்தி மாத்தி பேசக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு எதிரான சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அதை ஆதரித்தார். இதற்கு பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டு, இனிமேலு பிஜேபியுடன் எனக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி. முதலமைச்சராக இருந்த போது சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடிய அத்தனை பேர் மேலயும் வழக்கு போட்டு தடியடி நடத்தியவர் தான் எடப்பாடி பழனிசாமி. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு 100 திட்டம் இன்று பிஜேபி அறவே ஒழிக்கக் கூடிய வகையில் அதை மாற்றி மகாத்மா காந்தி பேரை கூட எடுத்து விட்டார்கள். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் மகாத்மா காந்தி அவர்கள் வழிபட்ட அந்த ராமன் பெயரா? இல்லை மகாத்மா காந்தியை கொன்ற ராமன் பெயரான்னு தெரியல.
தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருவது போல பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் வந்து செல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்குறதுக்கு தயாரா இல்லை. மூன்று மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு அரசு கூறும் பொழுது எடப்பாடி பழனிசாமி வாய மூடிக்கிட்டு மௌனமாக உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி எதிர்காலத்தில் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக போகலாம்?. தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை தன்னை வளர்த்த கட்சிக்கும் துரோகம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியில் தான் மட்டும் தான் இருக்க வேண்டும் என, என்னிதான் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வைத்தார். தற்பொழுது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து பணியாற்றுகிறார். நிலக்கோட்டை தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளதாக பட்டியலிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட, நிலக்கோட்டை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் நாகஜோதியை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என, பேசினார். கூட்டத்தில், திமுக ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.