03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » காங்.வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்ரீபெரும்புதூரில் களமிறங்கும் செல்வப்பெருந்தகை..

காங்.வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்ரீபெரும்புதூரில் களமிறங்கும் செல்வப்பெருந்தகை..

எழுதியவர்: Askar April 3, 2026, 6:15 pm

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், முடிவு செய்து வேட்டபாளர்கள் அறிவிக்கப்பட்டு தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6-ம் தேதியோடு நிறைவடைகிறது.

ஏற்கனவே திமுக தலைமையிலான மதர்சார்ப்பற்ற கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் தங்கள் வேட்பாளர் பட்டியலை இன்று (ஏப்.03) அறிவித்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு :-

1. பொன்னேரி (தனி) – துரை சந்திரசேகர்

2. திருபெரும்புதூர் (தனி) – செல்வப்பெருந்தகை

3. சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்தினம்

4. உதகமண்டலம் – பி.ராமச்சந்திரன்

5. ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்

6. அறந்தாங்கி – டி.ராம சந்திரன்

7. கடலூர் – ஏ.எஸ்.சந்திரசேகரன்

8. மயிலாடுதுறை – ஜமால் யூனுஸ் முகமது

9. காரைக்குடி – மாங்குடி

10. சிவகாசி – கணேசன் அசோகன்

11. திருவாடனை – ராம கருமாணிக்கம்

12. திருவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்

13. நாங்குநேரி – ரூபி மனோகரன்

14. குளச்சல் – தாரகை கத்பெர்ட்

15. விளவங்கோடு – டி.டி.பிரவீன்

16. கிள்ளியூர் – எஸ்.ராஜேஷ்குமார்

17. வேளச்சேரி – ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா

18. ஊத்தங்கரை (தனி) – ஆர்.கருப்புசாமி

19. துறையூர் (தனி) – விச்சு லெனின் பிரசாத்

20. கவுண்டம்பாளையம் – கே.பி.சூரியபிரகாஷ்

21. ஆத்தூர் (தனி) – எஸ்.கே.அர்த்தநாரி

22. பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

23. சிங்காநல்லூர் – ஸ்ரீநிதி நாயுடு

24. அம்பாசமுத்திரம் – வி.பி.துரை

25. கிருஷ்ணகிரி – ஏ.செல்லகுமார்

26. உசிலம்பட்டி – சரவண குமார்

27. சங்கரன்கோவில் (தனி) – சங்கை கணேசன்

28. மேலூர் – (இன்னும் அறிவிக்கப்படவில்லை)

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!