ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் அமைந்துள்ள பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 41வது ஆண்டு விளையாட்டு விழாவும் பட்டமளிப்பு விழாவும் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் மாணவிகள் கழிவு பொருட்களை பயன்படுத்தி தயாரித்த அலங்கார ஆடைகளை அணிந்து மேடையை வண்ணமயமாக அலங்கரித்தது அனைவரையும் கவர்ந்தது.
பள்ளி தாளாளர் எஸ். கமரூதீன் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியை நூருல் ஆஸிமா வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மாணவரும் தற்போது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஏ.எம். அபிராஜன் (எம்பிபிஎஸ்) மற்றும் அபாகஸ் ஒருங்கிணைப்பாளர் ஏ. உமர் ஷரீஃப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தக்வா பள்ளி இமாம் ஜெய்னுதீன் மற்றும் ஆர்.ஐ. முஹம்மது அஜாருதீன் முன்னிலை வகித்தனர். விழாவில் ஏராளமான பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் ஹதிஜா பானு ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியை ஆசிரியை ஆசிபா பானு தொகுத்து வழங்கினார்.
இறுதியாக ஆசிரியை பெனிட்டா நன்றியுரை வழங்கினார்




You must be logged in to post a comment.