03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பழனி பங்குனி உத்திரத் திருவிழா.! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு க

பழனி பங்குனி உத்திரத் திருவிழா.! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு க

எழுதியவர்: Baker BAker April 3, 2026, 10:02 am

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு எட்டாம் நாள் நிகழ்ச்சியாக யாதவர் மடத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா எழுந்தருளினார். நாளை (சனிக்கிழமை) கொடியிறக்கப்பட்டு நிறைவு பெறுகிறது.

 

       பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் பங்குனி உத்திரம் முக்கியமானதாகும். பங்குனி உத்திரத் திருவிழா பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த மார்ச்.26 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்துநாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது விழா நாட்களில் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி தந்த சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, தங்கமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சன்னதி, கிரிவீதி உலா எழுந்தருளினார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம்பதி சமேதர் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து வெள்ளித்தேரோட்டமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெற்றது. யாதவர் மடம் பரம்பரை அறங்காவலர்கள் கலிதீர்த்த கோனார் மூக்கம்மாள் அறக்கட்டளை சார்பில் தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. யாதவர் மடத்தில் எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை வாகனத்தில் ஏற்றம் செய்யப்பட்டு சுவாமி சன்னதி வீதி, கிரிவீதி உலா எழுந்தருளினார். சுவாமியை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தட்டுகளில் விளக்குகளை ஏற்றி வரவேற்றது பக்தர்களை கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் வைரமுத்து, பரம்பரை தக்கார் வாரிசுகள் ராஜேஸ்வரியம்மாள், சௌந்தரம்மாள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பார்த்தசாரதி, வெற்றிச்செல்வன், சிவசண்முகம் மற்றும் யாதவர் சமூகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று வெள்ளிப்பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி கிரிவீதி உலாவும், சனிக்கிழமை திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுதலும் நடைபெறுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!