03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கன்னியாகுமரி அருகே பைக் விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்..

கன்னியாகுமரி அருகே பைக் விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்..

எழுதியவர்: Askar April 3, 2026, 8:45 am

கன்னியாகுமரி அருகே பைக் விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள மாறான்கோணம் மண்ணெடுத்தான் விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். 3வது மகள் அர்ச்சனா (16). தக்கலையில் உள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 30 ஆம் தேதி நாகர்கோவிலுக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தில் தக்கலை நோக்கி வந்து கொண்டிருந்தார். வில்லுக்குறி வெள்ளச்சிவிளை பகுதியில் வந்த போது எதிரே வேகமாக சென்ற பைக் அர்ச்சனா வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு பின் தலை, வாய் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.அவரை அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அர்ச்சனா இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அர்ச்சனாவின் சகோதரி ஆதித்யா இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பைக்கை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய வில்லுக்குறி மேலப்பள்ளம் ரெதீஷ் (26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‎

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!