29 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை தொகுதிக்கு தவெக வேட்பாளர் அறிவிப்பு: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.!

திருவாடானை தொகுதிக்கு தவெக வேட்பாளர் அறிவிப்பு: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.!

எழுதியவர்: Baker BAker March 29, 2026, 8:55 pm

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரான மருத்துவர் ராஜீவ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகியதும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் திரண்டு, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வேட்பாளர் அறிவிப்பால் கட்சித் தொண்டர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளதுடன், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் செயற்பாடுகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!