29 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மநீம தொண்டர்கள் அதிருப்தி: தேர்தலில் போட்டியில்லை என்ற அறிவிப்பால் மனக்கசப்பு.!

மநீம தொண்டர்கள் அதிருப்தி: தேர்தலில் போட்டியில்லை என்ற அறிவிப்பால் மனக்கசப்பு.!

எழுதியவர்: Baker BAker March 29, 2026, 8:47 pm

மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சி தலைவர் கமல்ஹாசன் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என அறிவித்ததையடுத்து, கட்சி தொண்டர்களிடையே அதிருப்தி நிலவுகிறது.

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் ஆசைதம்பி தலைமையில் மநீம தொண்டர்கள் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

“வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற தலைவரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இருப்பினும், திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக செயல்படவும், வாக்களிக்கவும் மநீம தொண்டர்கள் தயாரில்லை. எங்கள் ஜனநாயக கடமையை தனிப்பட்ட முறையில் நிறைவேற்றுவோம்,” என்றனர்.

மேலும், “தலைவர் எடுத்த முடிவால் எங்கள் மனம் காயமடைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்களை அழைத்து ஆலோசிப்பார் என நம்புகிறோம். தலைவர் உத்தரவிட்டால், மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளோம்,” என்றும் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!