03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் 4,200 அமெரிக்க டாலர் பறிமுதல் .!

ராமநாதபுரம் அருகே வாகன சோதனையில் 4,200 அமெரிக்க டாலர் பறிமுதல் .!

எழுதியவர்: Baker BAker March 29, 2026, 8:03 pm

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் ஆணையம் நியமித்துள்ள பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருப்புல்லாணி அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பறக்கும் படையினர் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி பரிசோதனை செய்தனர்.

சோதனையின் போது, அந்த வாகனத்தில் இருந்த நபரிடமிருந்து 4,200 அமெரிக்க டாலர் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. தேவையான ஆவணங்கள் இல்லாததால், அந்த வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அது தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் காலத்தில் சட்டவிரோதமாக பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, இத்தகைய சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!