29 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் போட்டி..

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் போட்டி..

எழுதியவர்: Askar March 29, 2026, 5:36 pm

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து எஸ்டிபிஐ கட்சி சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி திமுக கூட்டணியில் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எஸ்டிபிஐ கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி  கட்சியின் மாநில தலைமையகத்தில் இன்று (மார்ச்.29) நடைபெற்றது. அதன்படி நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளராக,  கட்சியின் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக் அவர்களை, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி அறிவிப்பு செய்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொருளாளர் அப்துல் சத்தார், தேசிய செயலாளர் யாமுகைதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில துணைத் தலைவர் அச.உமர் பாரூக்,  பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன்,  ஏ.கே.கரீம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அமீர் ஹம்சா, முகமது ரஷீத்  மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!