18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் வைகோவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் அடிதடி- வீடியோ பதிவு..

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் வைகோவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் அடிதடி- வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் July 6, 2018, 5:04 pm

தூத்துக்குடியில்  நீதிமன்றத்தில் பிரனாப் முகர்ஜிக்கு கருப்பு கொடி காட்டிய வழக்கில் ஆஜராகிட வந்த வைகோவை தரக்குறைவாக சில வழக்கறிஞர்கள் பேசி கோசம் போட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜராகி 15 நிமிடம் கழிந்து வெளியே வந்த போது வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்த சில வழக்குறைஞர்கள் மீண்டும் கோஷம் எழுப்பி அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இதனைக் கண்டு கோபம் கொண்ட ம.தி.மு.க வினர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்பு இருந்து தகாத வார்த்தைகள் பேசியவர்களை நோக்கி ஒடிச் சென்று கற்களை வீசி நிதானமில்லாமல் இருந்த  வழக்கறிஞர்கள் ஜெகதீஷ் வெற்றி ஆகிய 2 வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தாக்கப்பட்டவர்களை மீட்டு தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து வழக்கறிஞர்களை காப்பாற்றினர். இதனால் தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!