சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த காஞ்சனா தேவி, தனது உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக தேவகோட்டைக்கு சென்றிருந்தார். அப்போது தேவகோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அவர் தனது 18 பவுன் தங்க தாலி செயினை தவறவிட்டார்.
அதே நேரத்தில் அங்கு வந்த பிரதீப் குமார் மற்றும் அவரது மனைவி பிரதிகா, கீழே கிடந்த அந்த தாலி செயினை கண்டெடுத்து எடுத்துக் கொண்டனர். அவர்களுக்கு அவசரமாக கோவைக்கு செல்ல வேண்டியிருந்ததால், செயினை உடன் கொண்டு சென்று விட்டனர்.
பின்னர், மார்ச் 26 ஆம் தேதி மாலை தேவகோட்டைக்கு திரும்பிய அவர்கள், நேர்மையை காட்டி அந்த 18 பவுன் தங்க தாலி செயினை தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் நகர ஆய்வாளர் துரை முன்னிலையில், நகையை இழந்தவர்களுக்கு பாதுகாப்பாக நகைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும், நேர்மையுடன் செயினை ஒப்படைத்த தம்பதியினரை பாராட்டும் விதமாக சால்வை அணிவித்து கௌரவித்தனர். நகையை மீண்டும் பெற்றவர்கள் கண்ணீர் மல்க இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தனர்.
தவறவிட்ட 18 பவுன் தங்க தாலி செயினை நேர்மையாக ஒப்படைத்த தம்பதியினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.