03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள் உலக சாதனை – ஆத்திச்சூடி 2 நிமிடங்களில் ஒப்புவித்து அசத்தல்.!

பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள் உலக சாதனை – ஆத்திச்சூடி 2 நிமிடங்களில் ஒப்புவித்து அசத்தல்.!

எழுதியவர்: Baker BAker March 27, 2026, 12:10 pm

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் செயல்படும் பிரிட்டோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ–மாணவிகள், உலக அளவில் புதிய சாதனையைப் படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.

Jackie Book of World Records நடத்திய உலக சாதனை முயற்சியில், ஔவையார் அவர்களின் புகழ்பெற்ற ஆத்திச்சூடியிலிருந்து 109 குறள்களை, ஐந்து நிமிடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள், வெறும் இரண்டு நிமிடங்களிலேயே துல்லியமாகவும் வேகமாகவும் ஒப்புவித்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.

இந்த சாதனையில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவர்களும், மற்ற வகுப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பாகத் திகழ்ந்தனர். அவர்களின் திறமையும் ஒத்துழைப்பும் உலக சாதனை விருதை வெல்ல உதவியது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜித் சிங் முன்னிலையில் மாணவர்கள் பாராட்டப்பட்டனர். மேலும், முன்னாள் தொழிலாளர் துறை அமைச்சர் அன்வர் ராஜா  மாணவர்களை வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த உலக சாதனை, மாணவர்களின் திறமைக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பள்ளியின் கல்வித் தரத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!