17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் பேரூராட்சியில் பொது கழிப்பறை பயன்பாடு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..

மண்டபம் பேரூராட்சியில் பொது கழிப்பறை பயன்பாடு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் July 5, 2018, 5:40 pm
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேருராட்சி சார்பில் பொது கழிப்பறை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ச. நடராஜன் அறிவுறுத்தல் படி, பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத் ஆலோசனையின் பேரில் மண்டபம் ரயில்வே திடலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் விருத்தாசலம் வெற்றி கிராமிய விழிப்புணர்வு கலைக்குழு நிர்வாகி ராணி தலைமையிலான குழுவினர் கழிப்பறை பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்,  பிளாஸ்டிக் மற்றும் பாலித்தின் பை உபயோகிக்கக் கூடாது உள்ளிட்டன குறித்து விழிப்புணர்வு ஏற்படுததினர். அரசு மானியத்தில் வீடுகளில் கழிப்பறை கட்டுவது தொடர்பாக சுகாதார விழிப்புணர்வு பரப்புரையாளர்களிடம் தெரிந்து கொள்ளலாம் என பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியை  இளநிலை உதவியாளர் எஸ்.முனியசாமி,  துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஜாகீர் உசேன், சுகாதார விழிப்புணர்வு பரப்புரையாளர்கள் எஸ்.சிவரஞ்சனி ,  எஸ்.ஜமூனா, ஜெ.கார்த்திகா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!