சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தர்ம முனீஸ்வரர் ஆலயம் அருகிலுள்ள செக்போஸ்டில் வாகன சோதனை மேற்கொண்டது. அப்போது வாகனத்தில் பயணம் செய்த கீழக்கரை பகுதியைச் சேர்ந்த செய்யத் சுல்தான் பிவி என்பவரிடம், எந்தவித உரிய ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62,000/- பணம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து,தேர்தல் நடைமுறைகளின்படி தொகையை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு, ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை தாசில்தார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் காலத்தில் ரூ.50,000/-க்கு மேற்பட்ட பணத்தை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், அதற்கான உரிய ஆவணங்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விதிமுறைகளை மீறினால், பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடித்து ஒத்துழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படையின் அதிரடி சோதனை – ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் .!
எழுதியவர்: Baker BAker March 24, 2026, 9:48 am




You must be logged in to post a comment.