03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு முகாம்.!

கீழக்கரையில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய விழிப்புணர்வு முகாம்.!

எழுதியவர்: Baker BAker March 23, 2026, 2:38 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (NULM), வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து இந்த விழிப்புணர்வு முகாமை நடத்தின. இதில் வட்டாட்சியர் இராமசுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் கோகிலா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைத்தனர். மேலும், NULM உதவி திட்ட அலுவலர்கள் சத்ய சொரூபன், ஜெகன் விஜய், சமுதாய அமைப்பாளர் சரளா தேவி, கீழக்கரை வருவாய் ஆய்வாளர், காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர்கள் மற்றும் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டு வீடு தோறும் சென்று வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் அதிகளவில் பொதுமக்கள் வாக்களிப்பில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!