03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல் கொள்முதல் தொகை வழங்கப்படவில்லை: விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

நெல் கொள்முதல் தொகை வழங்கப்படவில்லை: விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

எழுதியவர்: Baker BAker March 23, 2026, 2:17 pm

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாக்கு உட்பட்டு திரு உத்திரகோசமங்கை அருகே களக்குடி கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்யப்பட்ட நெற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி மனு அளித்துள்ளனர்.

களக்குடி கிராமத்தை சேர்ந்த கிராமத் தலைவர் மு.முருகேசன் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:

அரசின் நேரடி கொள்முதல் நிலையம் (NCCF) மூலம் கடந்த 13.02.2026 முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தொடர்ந்து 23.03.2026 வரை சுமார் 1,24,650 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை அந்த நெல் விற்பனைக்கான தொகை விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படவில்லை.

இதனால், களக்குடி கிராமத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளனர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நிலுவையில் உள்ள நெல் கொள்முதல் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!