அகமுடையார் சமுதாயத்திற்கு அரசியலில் பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றால் தேர்தலில் தனித்து களம் இறங்குவோம் என அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் இஸ்லாமிய பெண் ஆவேச பேச்சு
ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் முன்னேற்ற சங்கம் சார்பில் பட்டணம் காத்தான் அமிர்தா நகர் பகுதியில் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் ராஜாஜி தலைமை வகித்தார் சங்கத்தின் செயலாளர் விஜய ராமகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார்
இணைச்செயலாளர் பாபு பொருளாளர் பாஸ்கர சேதுபதி துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்ற பொழுது கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் போன்று இருவர் உடையணிந்து வடிவமைப்பில் கூட்டத்தில் கலந்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியது அவர்களுடன் பலர் குழந்தைகளுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்
அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில் ஐந்து தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது
அதில் தமிழக அரசியலில் அகமுடையார்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் இல்லையேல் தனித்து அரசியலில் சுயேட்சையாக களம் இறங்குவோம் அகமுடையாளுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் பாதுகாப்பு அரணாக இருந்து தேர்தல் பணியாற்றுவோம் என பழனிபாபா மாணவி சாகின் பாத்திமா பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது
இரண்டாம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்து கொண்டு அரசியல் விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார்




You must be logged in to post a comment.