18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை வார்டுகளுக்கு வாக்குச்சாவடி மாற்ற மக்கள் டீம் கோரிக்கை..

கீழக்கரை வார்டுகளுக்கு வாக்குச்சாவடி மாற்ற மக்கள் டீம் கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2018, 11:38 am
கீழக்கரையில் புதிய வாக்குச் சாவடி அமைப்பது சம்பந்தமாகவும், அது சம்பந்தமான கருத்துக்களை உதவி தேர்தல் வாக்காளர் பதிவு  அலுவலர் மற்றும் வட்டாட்சியரிடம் 2 முதல் 9 ஜூலை வரை தெரிவிக்கலாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கீழக்கரை வார்டு எண் 12 மற்றும் 14 வது வார்டுகளுக்குள்ள வாக்குச் சாவடி மாற்ற வேண்டி கீழக்கரை வட்டாட்சியருக்கு மக்கள் டீம் சார்பாக  கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
அம்மனுவில்  சட்டமன்றம் மற்றும் பாராளு மன்ற தேர்தலில் ஓட்டு போடுபவர்களில் 12வது வார்டு பொதுமக்கள் ஹமீதியா மெட்ரிக் பள்ளியிலும், 14 வது வார்டுக்கு சதக்கத்துன் ஜாரியா பள்ளியிலும் ஓட்டளிக்க வேண்டும். இது தூரம் அதிகம் என்பதால் வாக்கு சதவீதம் குறைவு மற்றும் பெண்கள் முதியவர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு வார்டுகளுக்கு அருகே நடக்கும் வாக்குச் சாவடிகளான,  12வது வார்டுக்கு ( பாகம் எண் :42 ) ஹமீதியா தொடக்கப் பள்ளியிலும், 14வது வார்டுக்கு ( பாகம் எண் 40, 41)  ஹமீதியா மெட்ரிக் பள்ளியிலும் வாக்குச் சாவடிகளை மாற்றி அமைக்க வேண்டும் கோரிக்கை மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!