03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி

மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: Baker BAker March 21, 2026, 7:19 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியில் மேட்டுப்பாளையம் தாலுகா சி ஐ டி யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக நான்காம் ஆண்டு ,எளிய மக்களுக்கு பித்ரா அரிசி சமையல் பொருட்கள் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

காட்டூர் பகுதியில் அமைந்துள்ள காட்டூர் பள்ளிவாசல் அருகில் சி.ஐ.டி.யு பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக பித்ரா அரிசி வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் சிஐடியு பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சானவாஸ். அபிபுல்லா, யாசர்.

முகமது அலி ஜின்னா. ஆகியோர் பங்கு பெற்றனர்

 பித்ரா அரிசி (ஸதகத்துல் ஃபித்ர்) என்பது ரமலான் நோன்பு முடிந்து பெருநாள் தொழுகைக்கு முன் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு வழங்கும் கட்டாய தர்மமாகும். இது பொதுவாக பணமாகவும்அரிசி, கோதுமை, போன்ற முக்கிய உணவு தானியமாக நபர் ஒருவருக்கு சுமார் 2.5 முதல் 3 கிலோ வரை வழங்கப்படுகிறது ரமலான் பெருநாளில் ஏழைகளும் உணவருந்தி மகிழ்ச்சியாக இருக்கவும் இது வழங்கப்படுகிறது

 குடும்பப் பொறுப்பாளர் தன்னிடம் உள்ள உணவுக்கு மேலதிகமாக இருப்பின் தன் குடும்பத்தினர் ஒவ்வொருவர் சார்பிலும் பித்ரா அரிசி கொடுக்க வேண்டும்.

 ரமலான் மாத இறுதி நாட்கள் முதல் பெருநாள் தொழுகைக்கு முன் வரை, குறிப்பாக பெருநாள் தினத்தில் பித்ரா அரிசி மற்றும் உதவிகள் கொடுப்பது சிறந்தது மேலும் இந்நிகழ்ச்சியில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கார்ட்டூன் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!