17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » காக்கங்கரை-பரிதேசிப்பட்டி கூட்டு ரோட்டில் மணல் லாரி இருசக்கர வாகனத்தில் மோதி இருவர் பலி..

காக்கங்கரை-பரிதேசிப்பட்டி கூட்டு ரோட்டில் மணல் லாரி இருசக்கர வாகனத்தில் மோதி இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் July 2, 2018, 7:15 pm
இன்று காலை வேலூர் மாவட்டம் காக்கங்கரை-பரிதேசிப்பட்டி கூட்டு ரோட்டில் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி அடுத்த கூசக்கனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளிகள் மணி(40) சேட்டு (எ) தாடிக்காரன், குனிச்சி மோட்டூர் பகுதியை சேர்ந்த குமார் ஆகியோர் இருச்சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த போது காக்கங்கரை பகுதியை சேர்ந்த சென்டறயன் என்பவருக்கு சொந்தமான மணல் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மணி மற்றும் சேட்டு தலை நசிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த குமார் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி போலிசார் இருவர் உடலையும்  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் திருப்பத்தூர்- தர்மபுரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!