03 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் 100% வாக்குப் பதிவு பற்றிய விழிப்புணர்வு..

தென்காசியில் 100% வாக்குப் பதிவு பற்றிய விழிப்புணர்வு..

எழுதியவர்: Abubakker Sithik March 17, 2026, 11:40 am

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு 100% வாக்குப்பதிவு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் வரையப்பட்ட ரங்கோலியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களால் வரையப்பட்ட ரங்கோலி (கோலம்) மூலம் 100% வாக்குப்பதிவு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் 100% வாக்குப்பதிவு, எனது வாக்கு, எனது உரிமை, 100% வாக்களிப்போம்; வாக்களிப்பது நமது கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல. இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்றுக் கொள்ள அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மகளிர் திட்ட இயக்குநர் எஸ்.அபிதா ஹனீப், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அலெக்ஸ், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மாரிஸ்வரன், அ.பிரபாகர். மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் டேவிட் ஜெயசிங், இராஜேந்திரன், சரவண பாண்டியன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!