17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ்.மங்கலம் அருகே மருதவயல் கிராமத்தில் எருதுகட்டு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மருதவயல் கிராமத்தில் எருதுகட்டு

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2018, 6:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மருதவயல் மறுதாருடைய  அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு எருது கட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

25 வது ஆண்டாக தொடர்ந்து நடத்திவரும் இவ்விழாவில்  விளாங்காட்டூர், தாளடிகோட்டை, கொட்டகுடி, சேதுகால்  ஆகிய கிராமத்திலிருந்து காளைகள் பங்கேற்றன.

மேலும் காந்தி, துரைமோகன் உள்ளிட்டோர்  ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் கண்ணன்,  தனசேகரன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.  ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!