18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » திருநெல்வேலி அருகே போலியான பாஸ் வைத்து மணல் கடத்தியதாக 4 பேர் கைது..

திருநெல்வேலி அருகே போலியான பாஸ் வைத்து மணல் கடத்தியதாக 4 பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2018, 12:38 pm
திருநெல்வேலி அருகே போலியான பாஸ் வைத்து மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கங்கைகொண்டான் அருகே பிரதானச் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமார் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அச்சமயம் விருதுநகரில் இருந்து மணல் கொண்டு வந்த 4 டிப்பர் லாரியினை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மணல் குவாரியில் இருந்து மணல் கொண்டு செல்வதற்கான பாஸ் (அனுமதி சீட்டு) காண்பித்தனர். விசாரணையில், போலியான அனுமதி சீட்டை வைத்து லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, வல்லன்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் தங்கேஸ்வரன் (29), திருமலைக் கொழுந்துபுரத்தைச் சேர்ந்த  குமார் (33), பாளையங்கோட்டை சாந்திநகரைச் சேர்ந்த ரமேஷ் குமார் (34), கட்டளையைச் சேர்ந்த லட்சுமணன் (35) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்து மணல் கடத்தி வந்த 4 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!