18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிளாஸ்டிக் தடையும்.. மது, குட்கா ஒழிப்பு போன்ற கண்துடைப்புதான்.. வியாபாரிகளின் குமுறல்…

பிளாஸ்டிக் தடையும்.. மது, குட்கா ஒழிப்பு போன்ற கண்துடைப்புதான்.. வியாபாரிகளின் குமுறல்…

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2018, 3:40 pm
பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்யாதே.. உற்பத்தியை தடை செய் என சாமானிய வியாபாரிகளின் குமுறலாக உள்ளது.  நாளை முத‌ல் பிளாஸ்டிக் தடை, ஆனால் ஒருவாரத்திற்க்கு முன்பே துணி பைக்கு மாறிய வியாபாரிகள். ஆனாலும் சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்கிறார்கள்.
அரசாங்கம் போடும் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்கள் நலனுக்காகவே, ஆனால் இன்றைய சூழலில் புதிய அரசாங்க திட்டத்தின் மூலம் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி எந்த அளவு சுய லாபம் சம்பாதிப்பதலேயே குறியாக உள்ளனர் என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர். மத்திய அரசின் புதிய புதிய திட்டங்களால் மக்களின் வாங்கும் பழக்கம் குறைந்து, வியாபாரம் நலிந்து போகும் நிலையில் உள்ளோம், ஆனால் இது போன்ற புதிய சட்டங்களால் அரசு அதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கிறது என்கிறார் மற்றொருவர்.
இந்த ப்ளாஸ்டிக் தடை சட்டமும், புகையிலை மற்றும் மது தடை சட்டம் போலத்தான்.  இதனால் மக்களுக்கு தீங்கு என அறியும் போது அதன் உற்பத்தியை தடை செய்ய வேண்டும், உற்பத்தியை தடை செய்ய வேண்டியதுதானே, என பொறிந்து தள்ளுகிறார் பாதிக்கப்பட்ட மற்றொருவர்.
சாமானிய மனிதனுக்கே இது தெரியும் பொழுது, அரசாட்சியில் இருப்பவர்களுக்கு தெரியாதா??.. தெரிந்தும் ஏன்.??..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!