18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சமா??

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சமா??

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2018, 2:15 pm
சமீப காலமாக  அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “அலுவலகத்தில் உள்ளே உயர் அதிகாரிகள் நுழைவது போல் புரோக்கர்கள்  நுழைந்து அதிகாரி போல் மக்களிடம் பேரம்  பேசி நாளைக்கு வாங்க அல்லது 5 நாள் கழித்து வாங்க என்று சொல்லி விட்டு, இந்த புரோக்கர்கள்  மக்களின் வில்லங்க சான்றை, சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து எடுத்து கொடுக்கின்றனர்.   இதை சார்பதிவாளர் (ம) அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேடிக்கை பார்க்கின்றனரா அல்லது உடந்தையா என்பது புரியாத புதிராக உள்ளது”.
மேலும் யார் இந்த புரோக்கர்களுக்கு அதிகாரம் கொடுத்தது,    இவர்களுக்கு அங்கு என்ன வேலை, மக்கள் கேட்டதை எதுவாக இருந்தாலும் சார்பதிவாளர் அலுவலர்கள்  உடனே வழங்க வேண்டும்,
இதைப்பற்றி   ஏற்கனவே பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் சொல்லி உள்ளார்,  இருந்தும் சார்பதிவாளர் அலுவலகம் சரியாக மக்கள் பணி புரியாமல், புரோக்கர்கள் செயல்படுத்த அதிகமாக பணம் புழங்குகிறது என பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.  இந்த விசயத்தில் பத்திரபதிவுதுறை உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!