“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை. ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற வண்ணமே உள்ளது.
கீழக்கரையில் எங்கு திரும்பினாலும் சாக்கடை, குப்பை மேடுகள், கடற்கரையில் கலக்கும் கழிவு நீர், தெருக்களில் சாக்கடை வாருகால் மூடிகள் உடைந்து ஓடும் சாக்கடை, தேங்கி நிற்கும் கழிவு நீர், சொறி நாய்கள் மற்றும் பன்றிகளின் நடமாட்டம். ஊரெங்கும் நிறைந்திருக்கும் மருத்துவமனைகளால் சுகாதாரமற்ற முறையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் என அடுக்கி கொண்டே போகலாம். சமீபத்தில் கீழக்கரையைச் சார்ந்த சமூக சேவகர் ஒருவர் கீழக்கரையில் வீடுகளின் சுத்தத்தை ஆய்வு செய்ய வரும் அரசு அலுவலர்கள் சுகாதாரமானவர்களா?? என்ற கேள்வியை பொதுதளங்களில் எழுப்பியருந்தார். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய கேள்வி. தீர்வு காண இயலாத அரசு அதிகாரிகளை “இனி வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்” என்ற ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தார்.

கீழக்கரையில் தினமும் பல குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான வண்ணம் உள்ளனர். டெங்கு காய்ச்சல் வந்தாலே பரிசோதனைக்கு இராமநாதபுரம் அல்லது மதுரை செல்லும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த காய்ச்சலால் பல நடுத்தர மக்கள் நகைகளை விற்றும், கடன் வாங்கியும் வைத்தியம் பார்க்கும் சூழலுக்கு ஆளாகிறார்கள். மேலும் இன்னும் கீழக்கரை மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் பற்றிய தவறான புரிதலும், அறியாமையுமே பொருளாதாரத்தை அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த வாரம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சார்ந்த பரக்கத் அலி என்பவரின் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பல ஆயிரங்கள் செலவு செய்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “என்னுடைய குழந்தைகளுக்கு அடிக்கடி டெங்கு போன்ற காய்ச்சல் வருகிறது. இதற்கான காரணத்தை மருத்துவரிடம் கேட்ட பொழுது, கீழக்கரையில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது .உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் ஊரை மாற்றுங்கள் என்றார். இது விளையாட்டாக சொல்லப்பட்டாலும், இதுதான் இன்றைய கீழக்கரை நிலவரம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் மறுக்க முடியாது, ஆனால் ஊரை விட்டு போக முடியாது, ஆகையால் என் வீட்டை விட்டு சுகாதாரமான இடத்திற்கு மாறலாம் என எண்ணியுள்ளேன்” என வருத்தத்துடன் கூறி முடித்தார்.

நகராட்சி நிர்வாகம் சுகாதாரம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் மட்டுமல்ல, கீழக்கரையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவை என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும். அதே சமயம் நகராட்சியின் அலட்சிய போக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியமானதாகும். இந்த விழிப்புணர்வு ஏற்படும்பட்சத்தில் அதிக அளவிளான சுகாதார பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
மேலே உள்ள புகைப்படத்தை சுட்டிக்காட்டி பள்ளி குழந்தைகளுக்கு ஒரு வழி பாதையாவது கிடைக்குமா என ஏக்கத்துடன் கேட்கிறார் பள்ளியின் தாளாளர்.
சிந்திப்போம்!!! செயல்படுவோம்!!
போட்டோ:- மக்கள் டீம், சமூக வலைதளம் ..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.