17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நகராட்சி » கீழக்கரை நகராட்சி சார்பாக ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

கீழக்கரை நகராட்சி சார்பாக ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: keelai February 13, 2017, 10:31 am

கீழக்கரை நகராட்சி சார்பாக கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தொடர்ச்சியாக பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 13.02.2017 கிழக்குத் தெரு ஹைராத்துல் ஜலாலியா தொடக்க பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி துவங்கி வைத்தார். கீழக்கரை நகரை சுகாதாரமான நகராக மாற்ற அனைத்து ஆலோசனைகளையும் அதிகாரிகள் வழங்கினர். நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர். ஹாஜா, தொழிநுட்ப உதவியாளர் உதயகுமார் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!