17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கே.வலசை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

கே.வலசை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2018, 5:38 pm

இராமநாதபுரம் மாவட்டம்   போகலூர்    ஒன்றியத்திற்கு உட்பட்ட       பாண்டியூர்  அருகேயுள்ள கே.வலசை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், யாகசால பூஜை நடந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் கடம் புறப்பாடு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது வேத விற்பன்னர்கள் வேதங்கள்  முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.

இதனை தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!