18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவை மாநகராட்சி முற்றுகை முயற்சி.. முற்றுகையாளர்கள் கைது..

கோவை மாநகராட்சி முற்றுகை முயற்சி.. முற்றுகையாளர்கள் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2018, 4:39 pm

கோவை மாநகராட்சிக்கு 26 ஆண்டுகளுக்கு குடி தண்ணீர் விநியோகிக்கும் தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யக்கோரியும்,   தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு (சூயஸ்) தாரை வார்த்த கோவை மாநகராட்சியை கண்டித்து  அலுவலக முற்றுகை போராட்டம்  சமூக நீதிக் கட்சி பொதுச்செயலாளர்  வெள்ளமடை நாகராசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில நிர்வாகிகள் சிரவை கணேசன் சத்தி இராசேந்திரன், சத்தி சேகர், அலெக்ஸ், தண்டபாணி மாநகர  பொருப்பாளர் இரவிச்சந்திரன் விக்னேஷ் புறநகர் பொருப்பாளர் ஆறுச்சாமி தடா.நாகராசன் மற்றும் ஈரோடு மாவட்ட பொருப்பாளர் கோபால், அய்யப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு  முற்றுகையிட முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து ரயில் நிலையத்திலுள்ள அண்ணாமலை  மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!