தென்காசியில் கஞ்சா வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 11 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில், அம்பாசமுத்திரம் சுப்பிர மணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரின் மகன் நயினார் விக்னேஷ் (32), ஆலங்குளம் நெட்டூர் பகுதியை சேர்ந்த முப்புடாதி என்பவரின் மகன் இசக்கி குமார் (31), இசக்கிமுத்து என்பவரின் மகன் பேச்சு முத்து (30) ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன் T.P.S., பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில், மேற்படி மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.