09 March 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » உலக செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திரிபுரா மாநில எல்லை காவல் படை நெல்லை மாவட்டத்திற்கு வருகை..

திரிபுரா மாநில எல்லை காவல் படை நெல்லை மாவட்டத்திற்கு வருகை..

எழுதியவர்: Abubakker Sithik March 9, 2026, 10:51 am

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பிற்காக திரிபுரா மாநிலத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வருகை தந்துள்ளனர். படை வீரர்களை ஏர்வாடி காவல் துறையினர் செண்டை மேளதாளம் முழங்க பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பிற்காக திரிபுரா மாநிலத்தில் உள்ள சல்பகன் பகுதியில் உள்ள 133வது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி கமாண்டர் பசந்த் யாதவ் தலைமையில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், 9 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 12 தலைமை காவலர்கள், 59 காவலர்கள் என மொத்தம் 85 பேர் வருகை புரிந்துள்ளனர்.

அவர்களுக்கு நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிக்கு வருகை புரிந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களை ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி பூங்கொத்து கொடுத்து செண்டை மேள தாளம் முழக்கத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில் மகளிர் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!